புவனேஷ்வர்: ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் பொது வெளியில் முகக்கவசம் அணியாமல் நடமாடுவோருக்கு ரூ.1,000 அபராதமாக விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக முகக்கவசம் அல்லது கைக்குட்டை மூலம் முகத்தை மறைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய மாவட்ட கலெக்டர் விஜய் அம்ருதா குலங்கே, வீட்டை விட்டு வெளியே வரும் போது பொதுமக்கள் முகக்கவசமோ, கைக்குட்டை அல்லது ஸ்கர்ப் மூலம் முகத்தை மறைக்காமல் நகரப்பகுதியில் நடமாடினால் ரூ. 1,000, கிராமப்புறம் என்றால் ரூ.500 அபராதமாக செலுத்த வேண்டும். முகக்கவசம், கைக்குட்டை அல்லது ஸ்கர்ப் கட்டாயம் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், எந்தவொரு காரணமுமின்றி வெளியே தெருக்களில் நடமாடுவோர் காவலில் எடுக்கப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்தார்.
ஒடிசாவில் கஞ்சம் மாவட்டத்தில் முதல்முறையாக முகக்கவசம் அணியாமல் நடமாடுவோருக்கு அபராதம் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக குகுதகாண்டி தொகுதியில் பாகலதி கிராம பஞ்சாயத்தின் கீழ் உள்ள மத்தியா சாஹி கிராமத்தை கோவிட் -19 ஹாட்ஸ்பாட் என்று அறிவித்து அந்த இடத்திற்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது.